இப்படியும் தண்டனையா..!! பேஸ்புக் பாஸ்வேர்டு கொடுக்க மறுத்தவருக்கு 14 மாதங்கள் சிறை!
பிரிட்டனில் காவல்துறை விசாரணைக்கு பேஸ்புக்கின் பாஸ்வர்ட் கொடுக்க மறுத்தவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்…
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டீபன் நிக்கல்சன். இவருடைய குடும்பத்துடன் நண்பராகி நெருக்கமாக பழகிய 13 வயது சிறுமி லூசி மக்ஹூக் என்பவர் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில், லூசி கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் நிக்கல்சன் வீட்டில் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து காவல்துறை இவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை செய்வதற்க்காக நிக்கல்சனின் பேஸ்புக் பக்கத்தை ஆராய நினைத்தனர். இதற்காக போலீஸ் நிக்கல்சனிடம் பேஸ்புக் பாஸ்வேர்டை தரும்படி கேட்டனர். ஆனால், நிக்கல்சன் இது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக கூறி பாஸ்வேர்டை கொடுக்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீசார் விசாரணைக்கு பேஸ்புக் பாஸ்வேர்டை தர மறுத்த குற்றத்திற்காக நிக்கல்சனுக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது…
DINASUVADU
பிரிட்டன் நாட்டு சட்டப்படி, காவல்துறை விசாரணைக்காக சமூகவலைதளங்கள், கணினி பாஸ்வேர்டுகளை கொடுத்தாக வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.