இப்படியும் ஒரு அமைச்சரா!பாட்டுப்பாடி ஆட்டம் போடும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன்!
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், பெரு நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ள முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற அவர் அருங்காட்சியகத்தில் உள்ள கடல் பசு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளித்தார்.
பள்ளி ஒன்றுக்குச் சென்ற அவர், அங்கிருந்த ஆசிரியை மற்றும் மாணவர்களுடன் நடனமாடினார். ஸ்பைடர் குரங்குகளுடன் பொழுதைக் கழித்த போரிஸ் ஜான்சன், ஸ்லாத் போன்ற உயிரினங்களையும் கொஞ்சி ரசித்தார். பின்னர் அமேசான் நதியில் அதிவேகப் படகில் பயணித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.