இன்றைய (21.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள். குறித்த நேரத்திற்குள்ளாக விரைவாக செயல்களை முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மேம்படும் நாள்.
ரிஷபம் : இன்று வெளி இடங்களுக்கு செல்லக்கூடிய நாள். அந்த பயணங்கள் உங்களுக்கு ஆறுதலாக அமையும். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். தியானம் செய்வது மன அமைதியை தரும்.
மிதுனம் : நல்லதும் கெட்டதும் கலந்து காணப்படும் நாள். மனதினை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
கடகம் : இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களோடு செயல்படலாம். தேவையற்ற எண்ணங்களை மனதிலிருந்து நீக்கி விடுங்கள்.
சிம்மம் : இன்று முன்னேற்றம் உள்ள நாள். திட்டமிட்டு செயல்பட்டால் வளர்ச்சி உங்கள் கையில். ஆற்றலும் உறுதியும் நிறைந்திருக்கும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். யோகா தியானம் செய்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம் : இலக்குகளை அடைவதில் தடைகள் இருந்தாலும், உங்கள் மன தைரியம் மூலம் அதனை வெற்றி பெறுவீர்கள். பாதைகள் கடினமாக இருந்தாலும் உங்களுக்கு பலன் கிடைக்கும்.
விருச்சிகம் : விழிப்புணர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் எண்ணத்தில் தெளிவு இருக்கும். அதுவே உங்கள் வெற்றிக்கு மூலதனமாக செயல்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.
தனுசு : இறைவழிபாடு உங்களுக்கு மன அமைதியை தரும். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். நீங்கள் விரும்பியதை அடைய முயற்சி செய்யுங்கள்.
மகரம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். இன்று திருப்திகரமாக உணருவீர்கள்.
கும்பம் : சுற்றத்தாருடன் ஒன்றி இருங்கள். தேவைப்படுவோருக்கு பண உதவி அளியுங்கள். அல்லது ஏழைகளுக்கு உணவளியுங்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
மீனம் : உணர்ச்சிபூர்வமாக காணப்படுவீர்கள். அதனால், விரைந்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மூலம் இன்றைய நாள் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.