இன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்
- இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி
- மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு
தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும்.
இன்று அமாவாசை தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.அவ்வாறு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தங்களது முன்னோர்களுக்கு எல்லாம் தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர்.