இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்…!

Default Image

உலகம் முழுவதும் இன்று  ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் புனித தோமா தேவாலயத்தில் மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

Image result for easter celebration india 2018

ஒளியை குறிக்கும் வண்ணம் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்தனர். வாணவேடிக்கைகள் முழங்க, இயேசு உயிர்த்தெழுந்த காட்சி காட்டப்பட்டது.

காரைக்கால் பிரசித்தி பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Image result for tamilnadu churches easter celebration 2018

தூத்துக்குடி பனிமய மாதா போராலயத்தில் சிறப்பு திருப்பலியும்,இயேசு உயிர்த்தெழும் காட்சியும் நடைபெற்றது. கிறிஸ்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு பிறப்பை வரவேற்றனர்.

நெல்லை மாவட்டம் அகரக்கட்டு  அந்தோனியார் புனித மிக்கேல் ஆலயத்தில், தமிழக விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாண கூட்டு பிராத்தனை நடைபெற்றது.

திருவனந்தபுரம் உள்ளிட்ட  நகரங்களில் உள்ள தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Image result for easter celebration bolivia 2018

பொலிவியா மற்றும் பெரு கலைஞர்கள் ஒன்று சேர்ந்து சிலுவையில் ஏசு அறையப்பட்ட காட்சியை  பிரம்மாண்மான மணல் சிற்பமாக தத்ரூபமாக படைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்