இனி பாகிஸ்தானில் ஃபஸ்ட்கிளாக்கு தடை..!அதிரடி காட்டும் இம்ரான் கான் அரசு..!!

Default Image

பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணம் உள்ளிட்ட சலுகைகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, ராணுவத் தளபதி, சபாநாயகர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணத்துக்கு தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அந்த தடை அமலானது. இதனையடுத்து  பிஸினஸ் மற்றும் பொது வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர், பிரதமர்,உட்பட அனைவருக்கும்ஆடம்பரச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளிட்டோரின்  மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது தனி விமானம் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து அதிரடி காட்டி வருகிறார் இம்ரன்கான்.
DINADUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்