இந்த பழத்தின் விதைகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்குமாம்….!!! அது எந்த பழம் ?
ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டே இருக்கின்றனர். அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த நாவல் பழமும் அடங்கும். நாவல் பழத்தின் பெருமையை சொல்லி மாளாது. இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு கொடிய நோய்க்கு தீர்வாக இந்த பழம் இருக்கிறது. நாவல் விதைகளெவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
இன்று பெரும்பாலான மக்கள் நம் பண்டைய உணவு முறையை மறந்தே போய்விட்டனர். இதன் விளைவு எண்ணற்ற நோய்களின் தாக்கத்தால் இடர்படுத்தலே. அதிக மருத்துவ குணங்களை இந்த பழங்கள் தனக்குள்ளே ஒளித்து வைத்துள்ளன.
நாவல் விதைகளில் hyperglycaemia வை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர். பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த இதய நோயும் கூடவே சேர்ந்து வருகின்றது. இந்த நாவல் பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாகும். உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இது வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.