இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவரம் அறிவிப்பு…!!
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறும் எனப் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கூட்டத்தொடர் முதல் நாளன்று குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்குப்படுவது வழக்கம். அந்த நாளே நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே இதனைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளான 28ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் காங்கிரஸ்,அதிமுக,திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.