இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி – 40 பேர் உயிரிழப்பு…!!
இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இது நேற்று மாலை சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்தன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.