இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணுடன் டேட்டிங்!பெண்ணின் வீட்டிற்கு சென்றதால் மர்மமான முறையில் மரணம்!
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் டேட்டிங் தளத்தால் உயிரிளந்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவரான மவுலின் ராதொட் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார்.இவர் அங்கு உள்ள கல்லூரி ஒன்றில் கண்ணகியல் படித்து வருகின்றார்.சில நாட்களுக்கு முன் அவருக்கு டேட்டிங் செய்யும் செயலி மூலம் ஆஸ்திரேலியா பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் ,திடீரென்று ஒருநாள் மவுலின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற அவர் சரமாரியாக தாக்கப்பட்டு இருந்தார்.பின் அருகில் உள்ளவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.மவுலினை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மரணமடைந்தார்.இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.