இந்திய தம்பதியின் ‘செல்பி’ மோகத்தால் மரணம்…உறுதிப்படுத்தப்பட்டது..

Default Image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்த இந்திய என்ஜினீயர் தம்பதியர் விஷ்ணு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30), 800 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.

இந்திய என்ஜினீயர் தம்பதியர் எப்படி விழுந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இதற்கு மத்தியில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து ‘செல்பி’ படம் எடுத்தபோது தவறி விழுந்து இறந்து விட்டனர் என வெளிப்படையாக தெரிகிறது என்று விஷ்ணு விஸ்வநாத்தின் சகோதரர் ஜிஷ்ணு விஸ்வநாத் கூறி உள்ளார்.

மேலும், ‘‘சம்பவ பகுதியில் முக்காலியில் ஒரு கேமரா கேட்பாரற்று கிடப்பதாக அங்கு வந்த பொதுமக்கள் கண்டறிந்து கூறி இருக்கிறார்கள். அதன்பிறகுதான் விஷ்ணு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி உடல்களை வனத்துறையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். மீனாட்சி மூர்த்திதான் முக்காலியில் கேமராவை வைத்திருந்து இருக்க வேண்டும். அவர் செல்பி எடுப்பதற்காகத்தான் அவ்வாறு செய்திருக்க வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

யோசெமிட்டி தேசிய பூங்காவில் தவறி விழுந்து மரணம் நேரிடுவதற்கு முன்பாக டாப்ட் பாயிண்ட் என்ற இடத்தில் மற்றொரு தம்பதியர் எடுத்த ‘செல்பி’ படத்தில் மீனாட்சி மூர்த்தி தோன்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

dinasuvadu.com  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்