இந்திய, சீன நிறுவனங்களுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடை! அமெரிக்கா
அமெரிக்கா நவம்பர் மாதம் முதல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் அணுசக்தி தொடர்பாக ஈரானுடனான உடன்பாட்டை அமெரிக்கா முறித்துக்கொண்டது. இந்நிலையில் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிறுவனங்கள் பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து தப்ப வேண்டுமென்றால் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இந்திய, சீன நிறுவனங்களுக்குக் கூட இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா விதிக்க உள்ள பொருளாதாரத் தடைகள் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஈரானில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.