இந்தியா முதலிடம்…!!சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் அசத்தல்..!!

Default Image

ஆசிய அளவில் முக்கிய ஹாக்கி தொடரான சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் (ஆடவர்) ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் இந்திய அணி,முதல் லீக் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கில் வென்றது.இரண்டாவது லீக்கில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.3-வது லீக்கில் ஜப்பான் அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வறுத்தெடுத்த இந்திய அணி,4-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவிடம் 0-0 என்ற கணக்கில் போராடி டிரா செய்தது.
இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது.துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 13 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும், மலேசியா 10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்