இந்தியா சிஸ்டத்தை மாற்ற வேண்டும் …!சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம்…!
சிங்கப்பூர் துணை பிரதமர் தேவையான வளர்ச்சியை எட்டவேண்டுமானால் இந்தியா வியூகத்தை மாற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஏசியா லீடர்ஸிப் மாநாட்டில் பேசிய சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம், நட்பு ரீதியில் இந்தியாவுக்கு சில அறிவுரைகள் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்பு ஆண்டு தோறும் தேவைப்படும் நிலையில், அதில் நிலவும் பற்றாக்குறையைப் போக்க புதிய வியூகங்களை இந்தியா வகுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சாலை, ரயில், புதிய விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பில் ஈர்க்கத்தக்க முன்னேற்றத்தை இந்தியா கண்டிருப்பதாகக் கூறியுள்ளார். போட்டிச் சூழலை சமாளிக்க தொழில் செய்வதை எளிமையாக்குவது, அன்னிய நேரடி முதலீட்டில் தளர்வுகள் உள்ளிட்டவற்றில் தற்போதைய பயணப்பாதையின் வேகம், திசை உள்ளிட்டவற்றை இந்தியா மாற்ற வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.