இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி : குத்துசண்டை
கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான உலக இளைஞர் குத்துசண்டை போட்டியில் இந்தியா ஒரே ஒரு வேங்கலபதக்கம் மட்டுமே பெற்றிருந்தது.
ஆனால் தற்போது இந்தியாவிற்கு 7 பதக்கங்கள் கிடைக்க போகிறது. இந்த வருட போட்டியில் 7 பேர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும், அனைத்தும் தங்கமாக வந்தால் மிகுந்த சந்தோசம் தான்.
அவர்கள் 64, 54, 48, 57, 51, 81, 81+ ஆகிய பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டிகள் அசாம் மாநிலத்திலுள்ள கௌகாத்தியிlல் நடைபெறுகிறது. அவர்கள் விபரம் பின்வருமாறு 64கிலோ-அன்குசிதா போரோ; 54கிலோ-சாக்சி சவுத்ரி; 48-நீத்து; 57கிலோ-ஷாஜி சோப்ரா; 51கிலோ-ஜோதி குலியா; 81கிலோ-அனுபமா; 81+-நேகா யாதவ் ஆகியோர் அறையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.