இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக இங்கிலாந்து இளவரசி அறிவிப்பு..!

Default Image
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் நேற்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது
இதில் மைனா மகிளா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுஹானி ஜலோடா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், லண்டனில் உள்ள கொல்கத்தா கேண்டீனில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திருமணம் முடிந்ததும் மணமகளை சென்று பார்த்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்தினர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ள ஏழு இந்திய தொண்டு நிறுவனங்களில் மைனா மகிளா தொண்டு நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்