இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை !இந்தியா ராணுவத்தை அனுப்பினால் கடும் விளைவை சந்திக்கநேரிடும் ….
சீனாவின் ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் , மாலத்தீவுக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பினால், அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை சீனா எடுக்கும் என தெரிவித்துள்ளது. மாலத்தீவில் நிலவும் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண, இந்தியா தனது ராணுவத்தை அனுப்ப வேண்டும் என மாலத்தீவு முன்னாள் அதிபர் மொகமது நசீது கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. சபை வலியுறுத்தல் இல்லாமல், மாலத்தீவு விவகாரத்தில் வேறு நாடுகள் தலையிடக் கூடாது என்றும், சீனாவும் அவ்வாறு தலையிடாது என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா அதை மீறியால், சீனா அமைதியாக இருக்கும் என்பதாக அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அந்த பத்திரிகை, மாலத்தீவுக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி, தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது என்றும் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.