இந்தியாவின் உறவு எங்களுக்கு முக்கியம்!அமெரிக்கா
அமெரிக்கா,இந்தியா – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு வர்த்தகம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணம் இல்லை என்று தெரிவிள்ளது.
ஏப்ரலில் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்பட்டு மைக் போம்பியோ நியமிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 6-ல் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா காரணம் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகம் உள்ளிட்ட எதுவும் காரணமில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவின் உறவு தங்களுக்கு முக்கியம் என்ற அவர் அதனை மேம்படுத்தவே அமெரிக்கா விரும்புவதாகவும், கூறினார்.