இத்தாலி வெனிலில்- இந்தியாவின் சோனி….!!!!!

Default Image

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாளில், சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து, இவான் அயர் (Ivan Iyr) என்பவர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட சோனி என்ற திரைப்படம் வெனில் விழாவில் திரையிடப்பட்டது. கீதிகா வித்யா ஓல்யன் (Geetika Vidya Ohlyan), சலோனி பத்ரா ஆகியோர் நடித்துள்ள இப்படம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் இரண்டு காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய கதையாகும்.

Related image

75 வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவுநாளான நேற்று, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரளாக கலந்துக் கொண்டனர். நடுவர்களாக இருந்த நடிகை நவோமி வாட்ஸ் நடிகர் கிறிஸ்டோப் வாட்ஸ் உள்ளிட்டோர் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.

தங்க சிங்கம் விருதுக்குப் போட்டியிட்ட 21 படங்களின் இயக்குனர்களும் நட்சத்திரங்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இவ்விழாவில், ரோமா என்ற படத்திற்காக மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குனர் அல்போன்சோ குயரோன் (Alfonso Cuaron) விருதுபெற்றார்.

Related image

கிரேக்க இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸ் இயக்கிய the favourite படத்திற்கு கிராண்ட் ஜூரி விருது அளிக்கப்பட்டது. இப்படத்தில், சக்கர நாற்காலியில் அரண்மனையை சுற்றி வரும் 18ம் நூற்றாண்டின் அரசியார் ஆனி என்ற பாத்திரத்தில் நடித்த ஒலிவியா கால்மேன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். பிரபல ஓவியர் வான்கோவாக நடித்த at eternitys gate படத்திற்காக, வில்லியம் டாஃபோ-வுக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.

Image result for golden lion award in italy

ஆஸ்திரேலிய இயக்குனர் ஜெனிபர் கென்ட் இயக்கிய the nightingale படமும் இரண்டு விருதுகளைப் பெற்றது. பழிவாங்கும் திரில்லர் கதையான இப்படம் சிறப்பு நடுவர் விருதை தட்டிச் சென்றதுடன், இளம்அறிமுக நடிகராக மார்சலோ-வும் விருது பெற்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்