இதை செஞ்ச தொப்பை குறையும்..
ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் ஒருசில நபர்களுக்கு வயிறு சற்று பெரிதாக தெரிய ஆரம்பமாகிறது.அதனை தொப்பை என்று கூறுகின்றனர்.இது அனைத்துநபர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.அதனை குறைபதர்ற்கான வழிகளை கிழே காண்போம்.
கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
மூச்சி பயிற்சி மூலம் குறைதல்
முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை வெளியிட வேண்டும். இப்படியே இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை செய்ய வேண்டும்.இதற்கு லாங் ப்ரீத் டயட் என்று பெயர். இந்த லாங் ப்ரீத் முறையில் உடல் எடையை குறைப்பதை ஐரோப்பிய மருத்துவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு மருத்துவ ரீதியாக ஒர் காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.கொழுப்பில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் கலந்திருக்கும். ஆக்ஸிஜனை அதிகப்படியாக நாம் உள்ளிழுக்கும் போது அந்த கொழுப்பு செல்கள் உடைந்து கார்பன் மற்றும் தண்ணீராக உடையும். இதனால் அதிக ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் போது அது நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு செல்களை கரைக்க உதவிடுகிறது.
டவலை பயன்படுத்தி பயிற்சி செய்தல்
முதலில் ஒரு டவலை எடுத்து அதனை நன்றாக ரோல் செய்து கொள்ளுங்கள். ஏற்ற இறக்கங்களோடு இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது தரையில் உட்கார்ந்து கால்களை நீளமாக நீட்ட வேண்டும். அப்படியே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். படுத்ததும் கையில் வைத்திருக்ககூடிய டவலை உங்களின் இடுப்பகுதிக்கு அருகே வைக்க வேண்டும். இந்த பயிற்சியை தரையில் மேட் விரித்து செய்யலாம். மெத்தையில் வேண்டாம். அதே போல இப்படி படித்திருக்கும் போது கால்களை 8 முதல் 10 இன்ச் கேப்பில் உள்கூடி திரும்பியிருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்
தொப்பையை குறைக்க வயிற்று தசைகளுக்கு நேரடியாக அழுத்தம் கிடைக்கிறது. அதோடு முதுகுத்தண்டும் வலுவாகும். ஏற்கனவே முதுகுவலி இருப்பவர்கள், இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். ஆரம்பத்தில் சற்று சிரமாக இருக்கும் வலுக்கட்டாயமாக செய்ய வேண்டும். முதலில் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என்று படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.மூச்சுத்திணறல் ஏற்பட்டால் இந்த பயிற்சியை தொடர வேண்டாம்.