இதையெல்லாம் காலையில் சாப்பிட கூடாதா ! கவனமாக இருங்கள் ..

Default Image

இன்றய அவசரமான உலகில் காலையில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக்கு  செல்பவர்களும் காலை உணவு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.அவசர அவசரமகா கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு செல்கின்றனர்.அவ்வாறு சாப்பிடும் உணவுகளில் அனைத்தும் நமது உடலுக்கு சரியானதாக இருக்காது.காலையில் உண்ணும் உணவினை நாம் அறிந்து உன்ன வேண்டும். அப்போது தான் நம் உடல் சீராக இருக்கும்.அவற்றை பற்றி காண்போம்.

காபி 

Image result for காபிநம்மில் அதிகமானோர் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்போம். அனால் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் காபி குடிக்க கூடாது.அது நமது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும். எனவே சிறிது தண்ணீர் குடித்து விட்டு அதன் பின் காபி  அருந்துவது சிறிது நல்லது.முடிந்த அளவு காலையில் எழுந்தவுடன் காபி  குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

வெள்ளரிக்காய் 

Image result for வெள்ளரிக்காய்இயற்கையாக கிடைக்கும் வெள்ளரிக்காயில் அதிகமான அளவு நீர்  சத்துக்கள் இருக்கின்றது.நம்மில் பலர் டயட் என்ற பெயரில் காலையிலே வெள்ளரிக்காயை சாப்பிடுகின்றனர்.இவ்வாறு சாப்பிடுவதால் நமக்கு நெஞ்சி எரிச்சல் மற்றும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்,எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம்

Image result for வாழைப்பழம்அனைவர்க்கும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதாக இருந்தாலும் அதனை வெறும்வயிற்றில் உட்கொள்வது நல்லது கிடையாது.வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து  அதிகமாக உள்ளது வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் இரத்தத்தில் மக்னீசியம் சத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் உடலுக்கு இதய கோளாறுகள் ஏற்படும்.

இனிப்பு உணவுகள்

Image result for இனிப்பு உணவுகள்காலையில் இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதனால் கணையத்திற்கு அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது.எனவே காலையில் இனிப்பு வகை உணவுகள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தக்காளி 

Image result for தக்காளிதக்காளி சாப்பிடுவது அனைவர்க்கும் பிடிக்கும்.ஆனால் காலையில் தக்காளி உட்கொள்வது இரைப்பை புண்ணை உருவாக்கும். மேலும் தக்காளியில் உள்ள ஒரு வித அமிலம் அசிடிட்டியை ஏற்படுத்தும்.

ஆகையால் காலையில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.காலையில் முட்டை,பிரட்,நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது.இவை உங்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்