இது வழக்கம் தானே.! தளபதியின் பீஸ்ட்டை கைப்பற்றிய உதயநிதி.!

Default Image

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

டார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

தற்போது, இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் தமிழக உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ” பீஸ்ட்” திரைப்படத்திற்கு தமிழகத்தில் ஏராளமான திரையரங்குகளில் கிடைகும் என்று கூறப்படுகிறது.

பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்திற்க்கு திரையரங்குகளில் குறைவாகத்தான் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்