இது தேவையா….! குடிபோதையில் கார் ஒட்டிய பிரான்ஸ் கால்பந்து கேப்டன் : அவருக்கு கெடச்ச தண்டனைய பாருங்க …!!!
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவர் லோரிஸ்க்கு, குடிபோதையில் கார் ஒட்டியதற்காக 20 மாதங்கள் தடையுடன் 50 ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கால்பந்து அணித்தலைவராக ஹீயூகோ லோரிஸ், கடந்த மாதம் 24ம் தேதி குடிபோதையில் கார் ஒட்டியதாக, மத்திய லண்டன் போலீசாரால் லோரிஸ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு, லோரிஸ் கார் ஒட்டியதாக வாதம் முன் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, லோரிஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கார் ஓட்டுவதற்கு 20 மாதங்கள் தடை மற்றும் 50 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது.