இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மாற்று திமுக விசிக ஆதரவு – திருமாவளவன்

Default Image

தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுக தனது வேட்பாளரை அறிவித்து எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது.எதிர்கட்சிகளில் முதல் கட்சியாக விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்துவருகிறது.தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மக்களிடத்தில் அதிமுக மீது உள்ள வெறுப்பை தனதாக்கி கொள்ள திமுக முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சாதி கட்சிகள்,மதவாத, இனவாத கட்சிகள் என மக்களிடம் இணக்கம் இல்லாமல் இருக்கும் கட்சிகளை மக்கள் புறக்கனிக்கவே விரும்புகிறார்கள். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக மக்களோடு இணக்கமாக இருக்கும் எளிய மக்களின் கட்சிகளான தலித்,இடதுசாரிகள்,இஸ்லாமிய அமைப்புகள் அளவுக்கு திமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்