இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தின் போது குறுக்கிட்ட விமானம்!அதிர்ச்சியடைந்த போலீசார்
இளவரசர் ஹாரி திருமணத்தின் போது இங்கிலாந்தில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்ட இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று பறந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளவரசர் ஹாரி, நடிகை மேகன் இடையே கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
அதை முன்னிட்டு வின்ஸ்டர் தேவாலயப் பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் திருமணத்தன்று வந்திருந்தவர்களை கண்காணிக்கும் பணியில் ஏர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் ஹெலிகாப்டர் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டரின் கீழ்பகுதியில் சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் ஏர் லிங்கஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று குறுக்கிட்டுச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.