இங்கிலாந்தில் பலத்த புயலில் சிக்கிய விமானம் மிகுந்த போராட்டத்துக்கு நடுவே பத்திரமாக தரையிறங்கியது!
பலத்த காற்றில் சிக்கிய விமானம் ஒன்று, இங்கிலாந்தில் மிகுந்த போராட்டத்துக்கு நடுவே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. எடின்பரோ நகரில் பலத்த மழையும், புயல் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 112 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதால் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில், எடின்பரோ விமானநிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்தபோது புயலின் தாக்கத்தால் காற்றில் தத்தளித்தது. இதையறிந்த விமானி பக்கவாட்டில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.