இங்கிலாந்தில் உலகின் முதல் கருப்பு சுறா கண்டுபிடிப்பு!
கருமை நிறச் சுறா உலகில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் ஏராளமான வகையைச் சேர்ந்த சுறா மீன்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும்.
ஆனால் தற்போது இங்கிலாந்தின் தென்மேற்கு கடல் பகுதியில் கருமை நிறத்தாலான சுறா ஒன்று பார்க்கப்பட்டுள்ளது. போர்த்கர்னோ ((Porthcurno)) பகுதியைச் சேர்ந்த ரேச்சல் ஹோஸ்கன் ((Rachel Hosken)) என்பவர் இந்த கருப்புச் சுறாவை முதன்முறையாக படம் பிடித்துள்ளார். ஏறத்தாழ 24 அடி நீளமுள்ள இந்தச் சுறா, ரேச்சல் படம் பிடித்தபோது பொறுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.