இக்கணம் தேவை சிக்கனம்.. இன்று 'உலக ஆற்றல் பாதுகாப்பு தினம்'…..!!

Default Image

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அதிகம் பயன்படுத்தி வரும் மின்சாரம், நிலக்கரி, பெட்ரோல், அணு ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் ‘உலக ஆற்றல் பாதுகாப்பு தினம்’.
நம் அன்றாடம் பயன்படுத்தும் ஆற்றல்களை வீணாக்கி வருகிறோம். தற்போது, நம்மிடம் இருக்கும் இந்த ஆற்றல்கள் எல்லாம், ஒரு 100 அல்லது 150 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இது பல தரப்பட்ட மக்களுக்கு தெரியாது.
வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் முக்கியத்துவம் கூட இன்னும் பல பேருக்கு தெரியாது. இன்றைய காலக்கட்டத்தில் நிலக்கரி பயன்பாட்டில் சிக்கனம் மிகவும் தேவைப்படுகிறது.
அதே போல் எரிபொருளான பெட்ரோல் பயன்பாட்டிலும் சிக்கனம் தேவைப்படுகிறது. இதை எல்லாம் நாம் உணராமல், வீணாக்கி வருவதால், நம் எதிர்க்கால சந்ததிக்கு இந்த ஆற்றல்கள் பயன்பாட்டில் வருவது கேள்விக்குறி தான்.
இந்த ஆற்றல்களின் தேவையை உணர்ந்து, நம் எதிர்க்கால சந்ததிக்கு தரும் பொருட்டு, நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். நாளை உலகை பாதுகாக்க வேண்டும். இனியாவது, எக்கணமும் சிக்கனமாக இருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்