ஆஸ்துமாவை கட்டுபடுத்த இதை செய்யுங்கள்…
ஆஸ்துமா இந்த காலத்தில் அதிக நபர்களுக்கு வருவதற்கு வாய்புகள் அதிகமாக உள்ளது.இந்நோய் அனைத்து வயதினரிடமும் காணபடுகிறது.அதனை இயற்கை முறையில் நம் வீடுகளில் உள்ள பொருட்களின் மூலம் கட்டுபடுத்தலாம்.
சில வகை உணவுகள் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தடுக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக பழங்களில் வைட்டமின் சத்து அதிகமாக உள்ளது. இவை ஒவ்வாமையை குறைக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில பழங்கள் உண்டு.
மருத்துவ சிகிச்சை முறை
உணவு கட்டுப்பாடு என்பது ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியமான ஓன்று ஆகும்.தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஓன்று. அதே போல், ஒரு ஆரோக்கியமான உணவு முறையும் மனிதனை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு அம்சமாகும். ஆராய்ச்சியின்படி, குழந்தை பருவம் முதல் அதிக பழங்களை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு குறைவாக உள்ளதாக நாம் அறிந்து கொள்கிறோம்.
தாவரத்தின் மகரந்தம்
தேனீக்கள் ஒவ்வொரு தாவரத்தில் இருக்கும் மகரந்தத்தில் இருந்து தேனை சேகரிக்கின்றன. இந்த தேனை தினசரி ஒரு குறைந்த அளவு எடுத்துக் கொள்வதாலும், நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்குவிக்கப்பட்டு, ஒவ்வாமை குறைகிறது.
மக்னீசியம் சத்துக்கள் உள்ள கீரை
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்திலும், திசுக்களிலும் மக்னீசியம் அளவு குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதனால் தொடர்ந்து மக்னீசியம் அதிகம் உள்ள உணவை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு நாளடைவில் தடுக்கப்படுகிறது. கீரையில் உள்ள வைட்டமின் B சத்து, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவை குறைக்க உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்துமா போன்ற சுவாச தொடர்பான தொந்தரவுகள் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா குணப்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஆய்வின்படி, தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற ஆஸ்துமாவை அதிகரிக்கும் அறிகுறிகள் 34% வரை குறைக்கபப்டுகின்றன என்று கூறப்படுகிறது.