ஆஸ்திரேலியாவில் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போலி பேஸ்புக் பக்கம் முடக்கம் …!
கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட போலி பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் கருப்பினத்தவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் Black lives matter என்ற பக்கம் உருவாக்கப்பட்டது. 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில் பலவிதமான பொருட்களும் சந்தைப்படுத்தப்படுவதால், வர்த்த மதிப்பும் ஒரு லட்சம் டாலராக இருந்தது.
இந்த பேஸ்புக் பக்கம் குறித்து, ஆங்கிலச் செய்தி சேனல் நடத்திய புலனாய்வில், மேக்கே ((Mackay)) என்ற வெள்ளையின இளைஞர், தன்னை கருப்பினத்தவர் எனக்கூறிக் கொண்டு மோசடியாக நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குழுவில் இருந்த பலர் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்ததால், Black lives matter பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.