ஆஸ்திரேலியர் ஒருவர் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடித்ததாக தகவல்!
ஆஸ்திரேலியர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகத்தை கண்டுபிடித்ததாக தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2014ல் மாயமான எம்.எச் 370 விமானம் பற்றிய தகவல்கள் இதுவரை புதிராகவே உள்ளது. அதில் பயணித்த 239 பேரும் இறந்து விட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எம்.எச் 370 விமானத்தின் பாகம், கூகுள் இயர்த் (Google Earth) உதவியுடன், இந்திய பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் தீவு அருகே கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட பாகத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த தடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவை மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.