ஆர்.கே நகர் : இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இணைய உள்ளாரா தீபா???!
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அவரது தொகுதியான ஆர்.கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பிரிந்து இருந்த இபிஎஸ்-ஓபிஎஸ் தனித்தனியாக களம்கண்டனர். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டார். பிறகு அங்கு பணபட்டுவாடா நடப்பதாக கூறி தேர்தலை ரத்து செய்யப்பட்டது. பிறகு டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவின் படி இப்போது ஆர்கே நகரின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் அதே மருதுகனேஷ் நிருத்தபடுகிறார். ஆளும் கட்சிக்கு இப்போது ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் ஜெயித்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்போது ஜெ.தீபா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் அணி தங்களை நேரடியாக அணுகினால் கழகத்தை கலைத்துவிட்டு அவர்களுடன் இணைய உள்ளதாக தனது நெருங்கிய வட்டத்தில் பேசிகொண்டாராம். நடந்தாலும் நடக்கலாம்!