ஆய்வில் திடுக் தகவல் …! நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களா…!அப்போம் உங்களுக்கு கண்டிப்பா இது குறையும் …!கவனமா இருந்துக்கோங்க …!
ஆராய்ச்சியாளர்கள் உடலுழைப்பின்றி நெடுநேரம் அமர்ந்திருப்பது மூளையைச் சோர்வடையச் செய்து நினைவாற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 45 முதல் 75வரை வயதுள்ள 35பேரிடம் ஓர் ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.
அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றும், இதனால் அவர்களின் உடல் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்றும் விசாரித்துக் குறிப்பெடுத்துள்ளனர்.
இதில் உடல் உழைப்பு இல்லாமல் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு நினைவாற்றல் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சோம்பலைக் குறைத்து உடலுழைப்பைச் செலுத்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.