ஆய்வில் அதிர்ச்சி தகவல் !பிரபல நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் !
Bootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட, அழகு சாதனப் பொருட்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியதையடுத்து போலீஸார் ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட மேக்அப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிராண்ட் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.