ஆப்பிள் ஜூஸ் குடிச்சிருப்பீங்க…!!! ஆனா ஆப்பிள் ஜஸ் குடிச்சிருக்கீங்களா…?
ஆப்பிள் பலம் நம் அனைவருக்கும் தெரிந்த பலம் தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஏனென்றால் இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. நாம் ஆப்பிள் ஜூஸ் குடித்திருப்போம். ஆனால் ஆப்பிள் ஜஸ் அதிகமாக குடித்திருக்க மாட்டோம்.
தேவையான பொருட்கள் :
- நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்
- சர்க்கரை – மூன்று ஸ்பூன்
- காய்ச்சி ஆற வைத்த பால் – கால் கப்
- ஐஸ் கட்டி – 4 அல்லது 5 கட்டிகள்
செய்முறை :
ஆப்பிளுடன் தண்ணீர் சிறிதளவு, பால், சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி பரிமாறலாம்.
குறிப்பு :
ஐஸ்கட்டி உபயோகப்படுத்த விரும்பாதவர்கள் சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்பு பரிமாறலாம்.