ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கனமழையால் வெள்ளம்!18 பேர் உயிரிழப்பு!
18 பேர் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அபித்ஜன் ((Abidjan)) நகரில் கனமழை கொட்டித் தீர்த்ததில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.10 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து சென்றதால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மழை-வெள்ளத்துக்கு18 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வீடுகள் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்கவேண்டும் என ஐவரி கோஸ்ட் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.