ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் புது ஐடியா..!
ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தினந்தோறும் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. குண்டு வெடிப்பு, தற்கொலை தாக்குதல்கள் அன்றாட வாடிக்கையாக உள்ளது. பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. ‘செக்ஸ்’ தொல்லை தரப்படுகிறது.
இத்தகைய காரணங்களால் வெளியில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அதற்காக தற்போது ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை மக்கள் நாடுகின்றனர்.
அதற்காக தற்போது ஆசாத் பஜார் ஆப், அபோம் ஆப், ஜே.வி பஜார் டாட்காம் மற்றும் ஷரீனாஸ் டாட்காம் என்பன போன்ற புதிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முளைத்துள்ளன.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தங்களுக்கு ஒரு புதிய அனுபவம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் குறைந்த செலவில் விரும்பிய பொருட்கள் பாதுகாப்பாக கிடைக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஆன்லைன் வர்த்தகர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை தாக்குதல்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதால் மக்கள் கூட்டம் இல்லாத ரோடுகள் வழியாக சென்று பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதும் அவை வழங்கப்படுகின்றன.
50 ஆன்டுகளாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போது 50-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை லைசென்சு இன்றி நடத்தப்படுகிறது என வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.