ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு வெடிப்பு ! 25 பேர் பலி?
25 பேர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காபூல் பல்கலைக்கழகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 25 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.