ஆப்கானிஸ்தானில் நடந்த விமானப்படை தாக்குதலில்..!19-ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!
ஆப்கானிஸ்தானில் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 19பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்கர் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் எனக் கருதப்படும் இடங்களில் விமானப் படையினரும், நேட்டோ கூட்டுப்படையினரும் இணைந்து போர்விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 19பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் காரி எஸ்ரார், முல்லா ஹஸ்கர் ஆகிய இருவரும் ஐஎஸ் படையின் முதன்மையான தளபதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்