ஆதாரம் வேண்டும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்! கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதில்!
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனர் கே.இ.ஞானவேல்ராஜா அண்மையில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக ரூபாய் 10 கோடி கமலஹாசன் வாங்கியதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை படம் நடித்துக் கொடுப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். மேலும், அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கே.இ.ஞானவேல்ராஜா கமலஹாசனுக்கு கொடுத்த 10 கோடி ரூபாய் பணத்திற்க்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.