ஆண் , பெண் சமத்துவம் வேண்டும்…அமித்ஷா பேச்சால் சர்ச்சை…!!
கோயில் வழிபாட்டில் ஆண்-பெண் சமத்துவம் தேவையில்லை எனவும், அவ்வாறு கூறும் கேரள அரசை கவிழ்க்க வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதில்லை என தெரிவித்த அமித்ஷா, நீதிமன்றங்கள் சாத்தியமற்ற தீர்ப்புகளை அளிக்கக் கூடாது எனவும் கூறினார்.
ஐயப்ப பக்தர்களை அரசு ஒடுக்கி வருவதாக கூறிய அவர், சபரிமலையில் வன்முறை நடத்திய ஆயிரக்கணக்கான நபர்களை கைது செய்தது எதற்காக எனவும் கேள்வி எழுப்பினார்.பெண்களுக்கும் ஆண்களைப்போல் கோயிலில் வழிபட உரிமை வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்சின் முந்தைய நிலைப்பாடு. அதன்படி சபரிமலை தீர்ப்பை வரவேற்கவும் செய்தது ஆர்எஸ்எஸ். வகுப்புவாத அடிப்படையில் அரசியல் ஆதாயம் பெறவே ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் தங்களது நிலைபாடுகளை பின்னர் மாற்றிக் கொண்டன. இந்த பின்னணியில் பகிரங்க மிரட்டலுடன் வட இந்திய மாதிரி பிரச்சாரத்துடன் அமித்ஷா சனியன்று கேரளம் வந்துள்ளார்.
dinasuvadu.com