ஆண்டு விழா கொண்டாடிய ஆத்திரகார அதிபர்…!!!
தனது 70 தாவது ஆண்டு விழாவை கொண்டடும் விதமாக மிக பிரம்மண்டமான அணிவகுப்பும்,விளையாட்டு போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளது.வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அணிவகுப்பு நெருக்கமாக கண்காணிக்கப்படும்.
அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணிவகுப்பில் கொண்டுவரப்பட்டால், பிற நாடுகளிடையே அது கோபத்தை ஏற்படுத்தலாம்.அதிக எண்ணிக்கையிலான ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் செய்யும் நடன அசைவுகள் கொண்டு பரப்புரைகள் மேற்கொள்ளப்படும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஜூன் மாதம் சந்தித்துக் கொண்டதிலிருந்து வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு நல்ல நிலையில் இல்லை.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது குறித்து இருநாட்டு அதிபர்களும் தெளிவில்லாத ஒரு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.அது சிறப்பானதொரு செயலாக இருந்தபோதிலும் அதில் நேரம் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குறித்து எந்த ஒரு விளக்கமும் இல்லை.உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. மேலும் 1950களில் நடந்த கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க படைகளின் எஞ்சியவற்றை வடகொரியா திருப்பிக் கொடுத்த நல்லிணக்க செய்கைகளும் நடந்தேறின.
ஆனால், சமீபத்தில் நடைபெறுவதாக இருந்த மைக் பாம்பேயோவின் வட கொரிய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைகளை தள்ளிபோடுவதாக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர்மேலும் அமெரிக்காவுக்கு எதிராக நடந்துகொள்ள வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சீனா மீது டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.இந்த ராணுவ அணிவகுப்பு, வட கொரியாவின் நேர்மையும், ஏவுகணை பயன்பாட்டை நிறுத்தி வைத்ததாக கொடுத்த வாக்குறுதியையும் சந்தேகத்தில் ஆழ்த்தும் என கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முந்தைய அணிவகுப்பில், டாங்கிகள், ஏவுகணைகள் மறும் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் கலந்து கொண்டனர். மேலும் இதில் எத்தனை சிப்பாய்கள் கலந்துகொண்டார்கள், எத்தனை ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டிலும் என்ன மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே முக்கியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இங்கு மிக முக்கியமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏதேனும் பயன்படுத்தப்படுகின்றவா என்றும், எத்தனை ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கவனிக்கப்படும் என வட கொரிய செய்திகளின் ஆய்வாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் குறித்தே சர்வதேச அளவில் கவனங்கள் இருக்கும்.”ஏவுகணை பயன்பாட்டை விட்டுவிடுவது போன்ற எண்ணம் வட கொரியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை” என அவர் தெரிவித்தார்.அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று போலியாக நடிக்காமல் இருந்தால் அது ஒரு நல்ல அறிகுறி என்று தெரிவித்த அவர், அது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை உடைந்து போகிறது என்பதை காட்டும் என தெரிவித்தார்.
என்ன மாதிரியான விளையாட்டுகள் இருக்கும்?
இம்மாதிரியான பெரியளவிலான ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி 2013ஆம் ஆண்டு நடைபெற்றது.வட கொரியாவின் வரலாற்று குறித்து சொல்லும் இந்த வருட விளையாட்டுக்கள் `தி க்ளோரியஸ் கவுண்டி (Glorious county)` என்று பெயரிடப்பட்டுள்ளது.செட்பம்பர் மாதம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுகள் மிகப்பெரியதாக இருக்கும் என இரண்டு வாரத்தில் எடுக்கப்பட்ட செயற்க்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டுகள், பெரியதொரு திடலில் பல ஜிம்நாஸ்டிக்ஸ் கலைஞர்கள் ஒரே மாதிரியான அசைவுகள் மூலம் நடனங்களை நிகழ்த்தினர்.
வட கொரியாவின் பிரஜைகளை உற்சாகமூட்டும் வகையிலும், அவர்களின் இணக்கம், மற்றும் கம்யூனிஸ வகுப்புவாத கொள்கைகளை காட்டும் வகையிலும் அந்த நிகழ்ச்சிகள் இருக்கும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சிகளை காண சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் வட கொரியாவின் விமான சேவை நிறுவனமான ஏர் கோர்யோ, பீய்ஜிங்கிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.இந்த அணிவகுப்புகள் கண்கவரும் வண்ணம் நடைபெறும். ஆனால் கடந்த காலங்களில், குழந்தைகள் இதில் வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள வைக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்திருந்தது
DINASUVADU