ஆண்களுக்கும் #MeToo … மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி…!!
ஆண்களும் #MeToo _வை தொடங்கினால் என்ன ஆகும் என்று என்று மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை வெளியில் கொண்டுவர பெண்களால் தொடங்கப்பட்ட MeToo இயக்கம் தற்போது பல பெண்களின் பாலியல் பிரச்சனைகளை பேசவைத்துள்ளது.அது மட்டுமில்லாமல் சினமா பிரபலம் , அரசியல்வாதிகள் என ஏராளமானோர் மீது MeToo இயக்கம் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த MeToo இயக்கத்தின் வாயிலாக தற்போது பாஜக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் கடந்த காலத்தில் ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.அப்போது பத்திரிக்கை ஆசிரியராக இருந்த பிரியா ரமணி அக்பர் பாலியல் தொல்லை அளித்ததாக MeToo_வில் தற்போது பதிவிட்டார்.அதுமட்டுமில்லாமல் ஏராளமான பெண்களும் அமைச்சர் மீது குற்றம் சாட்டினார்.இது அரசியலில் பெரும் சர்சையை கிளப்பியது.
இந்நிலையில் இன்று வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் பாலியல் குற்றசாட்டால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறுகையில் , பெண்களால் ஆண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையை சொல்ல ஆண்களும் #MeToo _வை தொடங்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா..? என்று கேள்வி எழுப்பினார்.
DINASUVADU