2017-ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவி ஏற்றார். அதிபரான டொனால்டு டிரம்ப் செய்த பல செயல்கள் சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவும் யோசிக்காமல் அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்கிறார் என்று பலரும் டிரம்ப் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அவருடைய விக்கிப்பிடியாவில் உள்ள அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, மிகவும் அசிங்கமான புகைப்படம் இருந்தது மிகவும் சர்சையை ஏற்படுத்தியது.இது குறித்து தெரிவிக்கையில் இது ஹேக்கர்களின் வேலையாகத் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிலநேரத்திற்கு பிறகு இது சரி செய்யப்பட்டது.சென்ற 2016-ஆம் ஆண்டு கிளாரி கிளிண்டனின் விக்கிபிடியாவும் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபரின் விக்கிபிடியா ஹேக் செய்யப்பட்டுள்ளதால் ஹேக்கர்களால் அமெரிக்கா ஆடி போய் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.