ஆசிய விளையாட்டு போட்டி 2018: ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது…!
ஆண்கள் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி யது.இதன் மூலம் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை தட்டி சென்றது.
இப்பட்டியலில், மொத்தம் 270 பதக்கங்களை வென்று சீன முதல் இடத்தில உள்ளது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களாக உயந்துள்ளது.