ஆசிய விளையாட்டு போட்டி 2018:ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்…!
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈட்டி எரியும் பந்தயத்தில் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ் சோப்ரா ஈட்டி எரித்தலில் தங்கம் வெல்வாரா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.இந்த எதிர்ப்புபடி ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் 88.06 மீ வரை எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
இந்நிலையில் 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது இந்தியா.
DINASUVADU