ஆசிய விளையாட்டு போட்டி: தடம் மாறியதால் பறிக்கப்பட்ட தமிழக வீரரின் பதக்கம்..!!!
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 10 கிலோ மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லகபாஷ்மணன் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஆனால் அவருக்கான தடத்தை விட்டு ஓடியதாக பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின், புதுக்கோட்டையை சேர்ந்த கோவிந்தன் பங்கேற்று மிக அபாரமாக ஆடி மூன்றாவது இடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் பதக்கம் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் தடம் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டது.
இதனையடுத்து 4வது இடம் பிடித்த சீனாவின் ஜோ சாங்க்ஹாங் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிந்தன் தகுதி நீக்கம் செய்யப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தடகள சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி, கோவிந்தன் வெண்கலம் தடம் மாறி, ஜோ சாங்க்ஹாங் கு கொடுக்கப்பட்டது.