ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் அங்கீதா ரெய்னா : டென்னிஸில் அபார வெற்றி……!!!

Default Image

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.
அவர் மகளீர் ஒற்றையர் காலிறுதியில் ஹாங் காண்கின் யூடிஸ் சங்கை 6-4, 6-1 என்ற செடிகளில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலமாக அவர் வெங்களப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரஜநேஷ் குன்னேஸ்வரன் 6-3, 5-7, 6-4 என்ற செடிகளில் வியத்நாமின் லை ஹோ நாமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா/திவிஜ் சரண் இணை 6-3, 5-7, 10-1 என்ற செடிகளில் தைபேவின் சியே /யாங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா/ அங்கிதா இணை 6-4, 6-4 என்ற செட்களில் ஹாங் கிங்கின் சோங்/வோங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. எனினும், ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-3, 4-6, 3-6 என்ற செடிகளில் உஸ்பேர்கிஸ்தான் கரிமோவ் ஜூரபேக்கிடம் வீழ்ந்தார். மகளீர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் அங்கிதா ரெய்னா/பிரார்த்தனை தோம்பரே இணை 1-6, 3-6 என கஜகஸ்தானின் அணிடினோவா /டனிலினா இணையிடம் வீழ்ந்தது.
ஆடவர் இரட்டையர் காலிறுதியில் ராம்குமார் ராமநாதன் / சுமித் நாகல் இணை 7-5, 4-6, 2-10 என்ற செட்களில் கஜகஸ்தானின் பப்லிக்/எச்செயவ் ஜோடியிடம் வீழ்ந்தது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்