ஆசிய விளையாட்டு: பிவி சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது….!!!
பேட்மிட்டன் ஆசிய விளையாட்டு இறுதி சுற்றும் போட்டியில் இந்திய நட்ச்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து தோல்வி அடைந்து, வெள்ளி பதக்கம் பெற்றார்.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தனோசியாவின் ஜகர்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. இன்று மகளீர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து, சீன தைபேவின் தாய் டீஸு யிங்கிடம் மோதினார். இதில் பிவி சிந்துவை, 21-13,21-17 என டீஸு யிங் வென்றார். இறுதி சுற்றில் தோல்வி கண்டா சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
இதன் மூலம், டீஸு யிங் தனது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிட்டன் மகளீர் பிரிவில் இந்திய வெள்ளி பதக்கம்பெற்றது இதுவே முதல்முறையாகும்.