ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் 6 தங்க பதக்கங்களை வென்று ஜப்பான் வீராங்கனை சாதனை:

Default Image

18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4x 100 மீட்டர் மென்டல் தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டல் தொடர் நீச்சல் என்று 6 தங்க பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதம் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கங்கள் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியா துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜீன்மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார்.
ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்